முகப்பு
செய்திகள்

கோட் - 2 பாடல்களைப் பாடிய விஜய்!

நடிகர் விஜய் கோட் திரைப்படத்தில் இரு பாடல்களைப் பாடியுள்ளார்.

Updated On : 27 மே, 2024 at 1:23 PM
பகிர்:

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் ’கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கிடையே, விஜய் பாடிய முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், விழா ஒன்றில் கலந்துகொண்ட யுவன் சங்கர் ராஜாவிடம் கோட் அப்டேட் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு யுவன், “முதல்முறையாக இந்தப் படத்தில் இரு பாடல்களை விஜய் பாடியுள்ளார்.” என்றார். இதைக் கேட்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

Advertisement

கோட் திரைப்படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகள் நிறைவடைந்துள்ளது. இன்னும் சில நாள்களில் படப்பிடிப்பும் நிறைவடைய உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.