ஆமிர் கானின் நடிப்பில் வெளியான லால் சிங் சத்தா விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பினை பெற்றாலும் வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்தது. சமீபத்தில் அவர் தனது குடும்பத்துடன் நேரம் செலவிட இருப்பதால் இனி சில ஆண்டுகளுக்கு நடிக்க போவதில்லை என கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆமிர்கான் தனது தயாரிப்பு நிறுவனமான ஏகேபி (ஆமிர் கான் புரடக்ஷன்ஸ்) தயாரிப்பில் ‘லாகூர், 1947’ என்ற தலைப்பில் புதிய படத்தினை தயாரிக்கிறார் ஆமிர் கான். இந்தப் படத்தில் ஆமிர் கான் நடிக்கவில்லை.
ஆமிர் கானுக்கு ஜுனைத் கான் எனும் மகனும் இரா கான் எனும் மகளும் இருக்கிறார்கள். தற்போது ஜுனைத் கான் முதன்முதலாக திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். மஹாராஜ் எனப் பெயரிடப்பட்ட இந்தப் படம் நேரடியாக நெட்பிளிக்ஸில் வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகிறது.
இந்தப் படத்தில் ஜெய்தீப் ஆலாவட், ஷாலினி பாண்டே உடன் நடித்திருக்கிறார்கள். உண்மைக் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தப் படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தினை தயாரிக்க சித்தார்த் பி மல்ஹோத்ரா இயக்கியுள்ளார். 1862இல் நடைபெற்ற கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. அதிகாரமுள்ள ஒரு நபருக்கும் பயமறியா பத்திரிகையாளருக்கும் நடக்கும் கதை என படக்குழு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.