சவாரி, வெள்ளை ராஜா ஆகிய படங்களை இயக்கிய குகன் சென்னியப்பன் இயக்கயத்தில் சத்யராஜ், வசந்த் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வெப்பன்’.
ஆக்சன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது.
ஆயுதங்களால் அழிக்க முடியாத ஒரு சூப்பர் ஹியூமன் (super human) கதையாக இப்படம் தயாராகியுள்ளது.
முன்னதாக, மே மாதம் இப்படம் வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் தள்ளிப்போக, தற்போது ஜூன் 7 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.