'லக்கி பாஸ்கர்' வெளியீட்டுத் தேதி!
நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
துல்கர் சல்மானின் நடிப்பில் இறுதியாக வெளியான 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் கலவையான விமரிசனங்களைப் பெற்றது.
தொடர்ந்து, தக் லைஃப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானவர், பின்னர் அப்படத்திலிருந்து விலகினார்.
இதற்கிடையே, நடிகர் துல்கர் சல்மான் இயக்குநர் வெங்கி அட்லூரில் இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்கிற படத்தில் நடித்து முடித்தார். இப்படத்தில் நாயகியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
Advertisement
Advertisement
லக்கி பாஸ்கர் படத்தின் தெலுங்கு டீசர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றது.
இந்த நிலையில், லக்கி பாஸ்கர் திரைப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.