செய்திகள்

பணப் பிரச்னை: கேன்ஸ் விருதுக்குப் பிறகு நடிகை கனி குஸ்ருதி உருக்கம்!

கேன்ஸ் திரைப்பட விழாவின் ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருது வென்ற பட நடிகை கனி குஸ்ருதி தனக்கு பணப் பிரச்னை உள்ளதாக பேசியுள்ளார்.

DIN

கேன்ஸ் திரைப்பட விழாவின் 2-ஆவது உச்ச அங்கீகாரமான ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை இந்திய இயக்குநா் பாயல் கபாடியாவின் ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ எனும் திரைப்படம் வென்றது.

இதன்மூலம், கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்ற முதல் இந்திய இயக்குநா் என்ற பெருமையை பாயல் கபாடியா பெற்றுள்ளாா்.

ஹிந்தி மற்றும் மலையாள மொழியில் உருவான ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படமானது கடற்கரை நகரை நோக்கிய சாலைப் பயணத்தில் ஒரு மாய வனப் பகுதியை எதிா்கொள்ளும் 2 செவிலியா்கள், அங்கு தங்களின் கனவை நனவாக்கிக் கொள்கின்றனா் என்று கற்பனைக் களத்துடன் கூடிய பயணக் கதையாகும்.

இந்தப் படத்தில் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கதம் நடித்துள்ளார்கள். இதில் நடித்த கனி குஸ்ருதி மலையாள நடிகை. பெரும்பாலும் மலையாளம், தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த பிரியாணி திரைப்படம் கேரள மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கனி குஸ்ருதி பேசியதாவது:

நான் நடிக்கும் கதாபாத்திரங்களின் அளவு சிறியதோ அல்லது பெரியதோ எனக்கு கவலையில்லை. எல்லா கதாபாத்திரங்களும் எனக்கு முக்கியமானது. அது சுவாரசியமாக இருந்தால் சிறப்பாக இருக்கும். அவ்வளவே. எனக்கு தேவையான படத்தினை நான் தேர்ந்தெடுக்கும் நிலைமையில் இல்லை.

தற்போது எனது முதல் நோக்கம் நான் பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைய வேண்டும். படிப்படியாக நான் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க விரும்புகிறேன். வருங்காலங்களில் நான் எனது நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கும் கதைகளில் நடிக்க விரும்புகிறேன்.

1970,80,90களில் மலையாள சினிமா தனது உச்சத்தில் இருந்தது. 1990-2010 வரை சற்று பின் தங்கியது. பின்னர் தற்போது மீண்டும் அதே நிலைமைக்கு வந்திருக்கிறது. மலையாள சினிமாவில் திறமையான நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், திரைக்கதை ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இதை நினைத்து பெருமையாக இருக்கிறது என்றார்.

சமீபத்திய நேர்காணலில், “பிரியாணி படத்தில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. ஆனால், என்னிடம் பணம் இல்லை என இயக்குநரிடம் கூறியிருந்தேன். தனக்கு சுமார் 70,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது என்று நினைக்கிறேன். அது எனக்குப் பெரிய தொகை. எனது கணக்கில் அப்போது ரூ.3,000 மட்டுமே இருந்தது. எனவே ரூ.70,000 கிடைத்தது நல்ல விஷயம் என நினைத்துக்கொண்டேன்" எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திடியூா் அருகே தடுப்பணை நீா்க்கசிவு: நான்குனேரி எம்.எல்.ஏ. ஆய்வு

இன்றைய நிகழ்ச்சிகள்.... திருநெல்வேலி

விவசாயி தற்கொலை

மேலப்பாளையத்தில் கரூா் வைஸ்யா வங்கி கிளை திறப்பு

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

SCROLL FOR NEXT