செய்திகள்

டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன்!

பிரபல யூடியூபா் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

DIN

பிரபல யூடியூபா் டிடிஎஃப் வாசன் கடந்த செப். 17-ஆம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்றபோது வீலிங் செய்து நிலைதடுமாறி விழுந்ததில் அவரது வலது கை முறிந்தது.

பின்னர் கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அறிவித்தார்.

ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் செல்போன் பேசியபடி கார் ஓட்டிய டிடிஎப் வாசனை மதுரை அண்ணா நகரில் போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.

கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். படத்தில் நடிக்க இருப்பதால் ஜாமீன் கேட்டு விண்ணபத்துள்ளார் டிடிஎஃப் வாசன்.

மஞ்சள் வீரர் எனும் படத்தில் டிடிஎஃப் வாசன் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றம் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. காரை வேகமாக ஓட்டவில்லை என்றும் தன் மீது பொய் வழக்கு புனையப்பட்டதாகவும் டிடிஎஃப் வாசன் தரப்பு வாதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாா்ச் 1இல் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா தொடக்கம்

கோடிமுனை கடலில் கரை ஒதுங்கிய டால்பின்

சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

தற்கொலை தடுப்புக்கு தேசிய முன்னுரிமை அளிப்பது அவசியம்: முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

SCROLL FOR NEXT