செய்திகள்

தீபாவளி வெளியீட்டில் வென்றது யார்?

தீபாவளி வெளியீட்டு படங்கள் குறித்து...

DIN

தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வந்த படங்களின் நிலவரம் குறித்து...

இந்தாண்டு தீபாவளிக்கு பல பெரிய படங்கள் திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், படப்பிடிப்பு மற்றும் பிற காரணங்களால் அவை தீபாவளி வெளியீட்டில் திரைக்கு வரவில்லை. அஜித்தின் விடாமுயற்சி, புஷ்பா - 2 படங்கள் இந்த தீபாவளிக்கு வெளியாகியிருக்க வேண்டியவை.

இருப்பினும், பெரிய நட்சத்திரங்கள் இல்லாத இந்த தீபாவளிக்கு நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன், துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர், ஜெயம் ரவியின் பிரதர், கவினின் பிளடி பெக்கர் ஆகிய படங்கள் திரைக்கு வந்தன.

இதில், அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் திரைப்படங்கள் அசத்தலான வரவேற்பைப் பெற்றதுடன் பான் இந்தியளவில் வெற்றியடையும் என்று பாராட்டுகளைப் பெற்றிருக்கின்றன. ஆனால், பிரதர் மற்றும் பிளடி பெக்கர் படங்களுக்குக் கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. முக்கியமாக, ஜெயம் ரவிக்கு பிரதர் தோல்விப்படமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் மற்றும் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ஆகிய இரண்டு படங்களும் தீபாவளி கொண்டாட்டத்திற்கான படமாக வென்றுள்ளன.

மேலும், இந்தாண்டில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்த திரைப்படங்களில் இவை இரண்டும் இடம் பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT