நடிகர் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடித்த திரைப்படம் லக்கி பாஸ்கர். தீபாவளி வெளியீடாக அக். 31 வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
சாதாரண நபரான நாயகன் அரசு மற்றும் வங்கி நிர்வாகத்தை ஏமாற்றி பெரும் செல்வந்தனாக மாறும் கதையாக உருவான இப்படம், தெலுங்கு மற்றும் மலையாளத்தை முதன்மையாகக் குறிவைத்து உருவானாலும் தமிழிலும் கவனிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: பென்ஸ் படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!
முக்கியமான, சென்னையில் படம் வெளியான முதல் நாளைவிட தற்போது கூடுதலாகக் காட்சிகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. பிரதர் மற்றும் பிளடி பெக்கர் படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் அப்படத்தின் திரைகளை அமரனும் லக்கி பாஸ்கரும் நிரப்பும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், லக்கி பாஸ்கர் திரைப்படம் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி உலகளவில் ரூ. 55.4 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
தெலுங்கில், மகாநதி, சீதா ராமம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிளாக்பஸ்டர் வெற்றியைக் கொடுத்த துல்கர் சல்மான், லக்கி பாஸ்கர் மூலம் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.