ரூ. 500 கோடி பட்ஜெட்டில் நடிக்கும் சூர்யா?
சூர்யாவின் பாலிவுட் பட அப்டேட்...
சூர்யா நடிக்கும் பாலிவுட் படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல மொழி ரசிகர்களிடமும் படத்தைச் சேர்ப்பதுடன் அதிக நேர்காணல்களில் கலந்துகொண்டு பல கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார்.
அப்படி, சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில், பாலிவுட் படத்தில் அறிமுகமாகிறீர்களா? எனக் கேள்வி கேட்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: 3-வது பிளாக்பஸ்டர்... துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் வசூல்!
அதற்கு சூர்யா, “நான் நாயகனாக நடிக்கவுள்ள பாலிவுட் படத்தின் பேச்சுவார்த்தைகள் கடந்தாண்டிலிருந்து நடைபெற்று வருகின்றன. அதுதான் என் முதல் ஹிந்தி படமாக இருக்கலாம். அது என்ன படமென இங்கு பகிரமாட்டேன். தயாரிப்பு தரப்பிலிருந்து வருவதே சரியாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
சூர்யா குறிப்பிட்ட திரைப்படம், ‘கர்ணா’ என்றும் இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் பட்ஜெட் ரூ. 500 கோடி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.