முகப்பு
செய்திகள்

ஜெய்பீமுக்குப் பின் தமிழின் உன்னதமான படம்! அமரனை பாராட்டிய ஜோதிகா!

நடிகை ஜோதிகா அமரன் படத்தைப் புகழ்ந்துள்ளார்...

Updated On : 5 நவம்பர், 2024 at 12:42 PM
பகிர்:

நடிகை ஜோதிகா அமரன் திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் பல தரப்பினரிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் துவங்கி நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, அரசியல்வாதிகள் சீமான், பாஜக தலைவர் அண்ணாமலை என பிரபலங்கள் பலரும் படத்தை பெரிதாகக் குறிப்பிட்டு வருகின்றனர். ரசிகர்களிடம் உணர்ச்சிகரமான வெற்றியையும் பெற்றுள்ளது.

இந்த நிலையில், நடிகை ஜோதிகா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமரன் படத்தைக் குறிப்பிட்டு பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “அமரன் படக்குழுவினருக்கு சல்யூட். ஜெய்பீமுக்குப் பின் தமிழின் உன்னதமான திரைப்படம் அமரன். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி நீங்கள் வைரத்தைப் படைத்திருக்கிறீர்கள். நடிகர் சிவகார்த்திகேயன் இக்கதாபாத்திரத்திற்காக கடினமாக உழைத்ததை நினைத்துப் பார்க்க முடிகிறது. சாய் பல்லவி என்னவொரு நடிகை? கடைசி 10 நிமிடங்களில் என் இதயத்தைப் உலுக்கிவிட்டீர்கள். உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.

திருமதி இந்து ரெபேக்கா வர்கீஸ் உங்களின் தியாகமும் நேர்மறையான எண்ணமும் எங்களின் இதயங்களைத் தொட்டுவிட்டது. மேஜர் முகுந்த் வரதராஜன் ஒவ்வொரு குடிமகனும் உங்களைக் கொண்டாடுவதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்கள்; உங்களைப்போன்ற வீரமும் தைரியமும் கொண்டவர்களாகவே எங்கள் பிள்ளைகளை வளர்க்க விரும்புகிறோம். ரசிகர்களே, தயவுசெய்து இந்த வைரத்தை தவறவீடாதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

ஜோதிகாவின் இந்த வாழ்த்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் உள்பட அமரன் குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →