ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ்?
நடிகர் தனுஷின் புதிய படம் குறித்து...
செய்திகள்ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ்?
நடிகர் தனுஷின் புதிய படம் குறித்து...
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரங்கூன் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.
தற்போது, நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவான அமரன் திரைப்படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார். தீபாவளி வெளியீடாக அக். 31 அன்று திரையரங்குகளில் வெளியான அமரன் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: எல்.சி.யு.வின் இறுதிப்படம் இதுதான்: லோகேஷ் கனகராஜ்
இந்த நிலையில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் தயாரிக்க உள்ளதாகவும் தனுஷ் இயக்கிவரும் இட்லி கடை படத்தின் வேலைகள் முடிந்ததும் ராஜ்குமார் படத்தின் படப்பிடிப்பு துவங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.