ஹொம்பாலே ஃபிலிம்ஸின் 3 படங்களில் நடிக்க பிரபாஸ் ஒப்பந்தம். 
செய்திகள்

ஹொம்பாலே ஃபிலிம்ஸின் 3 படங்களில் நடிக்க பிரபாஸ் ஒப்பந்தம்!

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே ஃபிலிம்ஸின் 3 படங்களில் நடிக்க பிரபாஸ் ஒப்பந்தம் செய்துள்ளார்.

DIN

பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப் 1, 2 திரைப்படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக ஹொம்பாலே ஃபிலிம்ஸ் மாறியுள்ளது.

இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை வைத்து சலார் படத்தினை இயக்கினார். இந்தப் படத்தினையும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தயாரித்தது. 700 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

இந்நிலையில், ஹொம்பாலே ஃபிலிம்ஸின் அடுத்த 3 படங்களில் நடிக்க பிரபாஸ் ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதனை முன்னிட்டு சலார் 2 திரைப்படத்தின் பணிகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2026, 2027, 2028 ஆகிய ஆண்டுகளில் 3 படங்கள் வெளியாகுமெனவும் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பிரபாஸ் 24ஆவது படமாக தி ராஜா சாப் உருவாகி வருகிறது. 25ஆவது படமாக சந்தீப் வங்கா இயக்கும் ஸ்பிரிட் படம் உருவாகவிருக்கிறது.

இந்தப் படங்களுக்கு அடுத்த பிரபாஸ் 2027-பிரசாந்த் வர்மா இயக்கத்திலும் 2028இல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஹொம்பாலே ஃபிலிம்ஸ் கூறியதாவது:

மேட் இன் இந்தியா, பயணம் கடைசிவரை தொடரும்!

ரிபெல் ஸ்டார் பிரபாஸுடன் 3 படங்களில் ஒப்பந்தமாவதை மிகவும் பெருமையுடன் அறிவிக்கிறோம். இந்திய சினிமாவின் சாரம்சத்தை உலகத்துக்கு கொண்டு செல்வதே எங்களின் நோக்கம்.

மறக்கமுடியாத சினிமாட்டிக் அனுபவத்தை தர எங்களது வாக்குறுதியை தருவதற்கான பிரகடனம் இது. மேடை தயாராக இருக்கிறது. பாதைக்கு எல்லையே இல்லை. சலார்2 உடன் எங்கள் பயணத்தை தொடங்குகிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்திலிருந்து வந்த ரசமலாய்! பாம்பே என்று பேசிய அண்ணாமலையை விமர்சித்த ராஜ் தாக்கரே

தங்கம், வெள்ளி விலை மீண்டும் அதிரடி உயர்வு

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

SCROLL FOR NEXT