சிங்கம் அகெய்ன் போஸ்டர்.  
செய்திகள்

அர்ஜுன் கபூருக்கு மறுபிறப்பு..! ஒரே வாரத்தில் ரூ.260 கோடி வசூலித்த சிங்கம் அகெய்ன்!

ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் பாலிவுட் பிரபலங்கள் நடிப்பில் வெளியான சிங்கம் அகெய்ன் படம் வசூலில் அசத்தி வருகிறது.

DIN

அஜய் தேவ்கன் நடிப்பில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் வெளியான சிங்கம் ரிட்டர்ன் வெளியாகி 9 வருடங்கள் ஆகியதைத் தொடர்ந்து காவலர்கள் யுனிவர்ஸில் ரன்வீர் சிங் இணைந்து நடித்துள்ளார்.

அஜய் தேவ்கன் நடிப்பில் இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் 2011இல் சிங்கம் படம் வெளியானது. இது தமிழில் ஹரி இயக்கிய சிங்கம் படத்தின் ரீமெக்.

மீண்டும் 2014, 2018இல் படங்கள் வெளியானது. தற்போது, சிங்கம் யுனிவர்ஸில் 4 கதாநாயகர்கள் இணைந்துள்ளார்கள்.

அதிகரிக்கும் வசூல்

அஜய் தேவ்கனுடன் அக்‌ஷய் குமார், ரன்வீர் சிங் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரரும் நடிகருமான  ஸ்ரீசாந்த் ஆகியோர்கள் இணைந்து நடித்த சிங்கம் அகெய்ன் படம் நவ.1இல் வெளியானது.

ஒரு வாரத்தில் ரூ.260 கோடி வசூலித்துள்ளது. இதில் தீபிகா படுகோன், கரீனா கபூரும் நடித்துள்ளார்கள்.

24 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட ஹிந்தி பட டிரைலராக ஏற்கனவே சாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மறுபிறப்பு

அர்ஜுன் கபூர் வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் வெற்றி குறித்து பிடிஐக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

என்னுடைய நடிப்பு மக்களுக்கு பிடித்துள்ளது மகிழ்ச்சி. இது என்னுடைய மறுபிறப்பு, புதிய தொடக்கம் என்ன வேண்டுமானாலும் சொல்லாம். நான் இந்தப் படத்தில் ராவணனாக நடிக்கவில்லை. ஆனால், அவரை தொடர்புபடுத்தும்படி நடித்துள்ளேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 9

“வண்டிய நிறுத்துங்க..!” மதுபோதையில் அரசுப் பேருந்து ஓட்டுநர்! பயணிகள் சாலை மறியல்!

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 8

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 7

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 6

SCROLL FOR NEXT