அஜித்துடன் சண்டைப் பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தர். 
செய்திகள்

பில்லா மீண்டும் வந்துவிட்டார்..! அஜித்தை பாராட்டிய சண்டைப் பயிற்சியாளர்!

குட் பேட் அக்லி படத்தில் நடிகர் அஜித் சிறப்பாக நடித்துவருவதாக சண்டைப் பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தர் கூறியுள்ளார்.

DIN

நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக வெளிநாட்டில் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். அங்கு, இவருக்கான முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவருடன் அவர் குடும்பத்தினரும் தங்கியுள்ளதாகத் தெரிகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், இதில் அஜித் மூன்று தோற்றங்களில் நடிக்கிறார்.

அதன் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

தற்போது, படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயினில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அங்கு, முக்கியமான சில சண்டைக்காட்சிகளும் பாடலும் படமாக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை ரோமியோ ஃபிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி சீரிஸ் இணைந்து தயாரிக்கிறது. படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுவருவதால் பொங்கலுக்கு படம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. தேவி ஸ்ரீ பிரசாந்த இசையமைக்கிறார்.

இந்நிலையில், பிரபல சண்டைப் பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தர் நேர்காணல் ஒன்றில் பேசியதாவது:

பில்லா திரும்ப வந்துவிட்டார். இந்தப் படத்தில் புதிய அஜித்தினை பார்க்கலாம். தொடக்கம் முதல் இறுதிவரை ரசிகர்களின் கைதட்டலும் ஆரவாரமும் இருக்கும்படி உருவாகிவருகிறது.

படத்தில் அஜித் எதிர்மறையான கதாபாத்திரம் நடித்துள்ளார என்பது குறித்து சொல்லமாட்டேன். ஆனால், படம் வேற லெவலில் உருவாகிவருகிறது. பாருங்கள் என்றார்.

சுப்ரீம் சுந்தர் தள்ளுமாலா, அனிமல் படங்களுக்கு சண்டைப் பயிற்சி செய்து இந்திய அளவில் பிரபலமாகியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

11 ஆயிரத்தைத் தாண்டியது ஒரு கிராம் தங்கம்!

மருத்துவமனை கூடுதல் கட்டடங்கள் திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

பழங்குடியின மாணவர்கள் பள்ளி செல்ல வாகனங்கள்! முதல்வர் ஸ்டாலின் தொடக்கிவைத்தார்!

அதிக உறுப்பினர்களைச் சேர்க்கும் திமுக இளைஞர் அணிக்கு ஒரு லட்சம்

அழைப்பு அனுப்புதல் மோசடி! இப்படியும் ஒரு மோசடியா? மக்களே எச்சரிக்கை!!

SCROLL FOR NEXT