ஷங்கர் - ராம் சரண் கூட்டணியின் கேம் சேஞ்சர் டீசர்!
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
நாயகியாக கியாரா அத்வானி நடிக்க, படத்தில் எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
பான் இந்தியா படம் என்பதால் லக்னோவில் வைத்து படத்தின் டீசர் வெளியீட்டை வரும் நவம்பர் 9 ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்தியன் 2 வெற்றி பெறாததால் இந்தப் படம் ஷங்கருக்கு முக்கியமான படமாக அமைந்துள்ளது.
உலக முழுவதும் படம் அடுத்தாண்டு ஜன.10ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
டீசருக்கு முன்பாக நடிகை கியாரா அத்வானியின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில், படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.