முகப்பு
செய்திகள்

எடிட்டிங் பணிகளை முடித்த பெத்தி படக்குழு..! சிறப்புக்காட்சி எப்போது?

நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பெத்தி படத்தின் அப்டேட் குறித்து...

எடிட்டிங் அறையில் பெத்தி படக்குழுவினர். - படம்: எக்ஸ் / புச்சி பாபு சனா.
பகிர்:

நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பெத்தி படத்தின் எடிட்டிங் பணிகள் நிறைவடைந்ததாகப் படக்குழு அறிவித்துள்ளது. வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது.

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடித்த பெத்தி திரைப்படம் பலமுறை வெளியீடு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ராம் சரண் (41 வயது) தற்போது பெத்தி எனும் பான் இந்திய திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Advertisement

Advertisement

மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தினை புஜ்ஜி பாபு சனா இயக்கியுள்ளார்.

உள்ளூரில் விளையாட்டு கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்திற்காக தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சி செய்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதில் ரசிகர்கள், “இந்தியாவின் ஹல்க்” எனக் கூறினார்கள்.

ராம் சரணுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்த இப்படத்தின் முதல் பாடலான சிக்கிரி பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. இந்தப் படத்தின் எடிட்டிங் பணிகள் நிறைவடைந்த நிலையில், சிறப்புக் காட்சி ஜூன் 3ஆம் தேதி என படக்குழு அறிவித்துள்ளது.

summary

The PEDDI Edit has been locked All set and ready for massive premiere

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments