பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுனிதா, விஜய் சேதுபதி படம் | எக்ஸ்
செய்திகள்

35 நாள்கள் பாடம்! பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய சுனிதா முதல் பதிவு!

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகை சுனிதா வெளியேறினார்.

DIN

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகை சுனிதா வெளியேறினார்.

பிக் பாஸ் வீட்டிலிருந்து 35 நாள்கள் கழித்து வெளியேறியதால், நண்பர்களுடனான தனது நினைவுகள் குறித்து உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி, 5வது வாரத்தைக் கடந்துள்ளது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் 6 போட்டியாளர்கள் கூடுதலாக வைல்டு கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர்.

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் சிவக்குமார், பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி, ராயன், ராணவ், நாகப்பிரியா, வர்ஷினி ஆகியோர் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்தனர்.

வாரம் இரு போட்டியாளர்கள்

பிக் பாஸ் வீட்டிற்கு புதிதாக வந்த போட்டியாளர்களால் சுவாரசியம் ஏதுமில்லை என்றாலும், பழைய போட்டியாளர்களுக்கு சவாலாகவே அமைந்தனர்.

5 ஆவது வார எலிமினேஷனில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ள நபர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், இந்த வாரம் எதிர்பாராதவிதமாக ஒருவர் மட்டுமே வெளியேறினார். குறிப்பாக யாரும் எதிர்பாராத வகையில் சுனிதா வெளியேற்றப்பட்டார்.

சுனிதா நெகிழ்ச்சி

பிக் பாஸ் வீட்டிலிருந்து கண்ணீர்மல்க வெளியேறிய சுனிதா, வீட்டில் உள்ள நண்பர்கள் குறித்து நேர்மறையாக கருத்துகளைக் கூறி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்தார்.

கடந்த வாரங்களில் தயாரிப்பாளர் ரவீந்திரன், அர்ணவ், தர்ஷா குப்தா ஆகியோர் வெளியேறினர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு முதல்முறையாக சமூகவலைதளத்தில் சுனிதா பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்த நினைவுகளை விடியோவாகப் பகிர்ந்த சுனிதா, 35 நாள்கள். எண்ணற்ற நினைவுகள். வாழ்நாள் நன்றிக்கடன். பிக் பாஸ் வீட்டின் அனைத்து நிகழ்வுகளும் அனைத்து பிணைப்புகளும் அனைத்து பாடங்களும் இதோ உங்களுக்காக எனக் குறிப்பிட்டி விடியோ பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்கா வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT