செய்திகள்

ரூ. 100 கோடி பட்டியலில் இணைந்த துல்கர் சல்மான்!

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்துள்ளது.

DIN

துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைப்படம் ரூ. 100 கோடி வசூலித்துள்ளது.

நடிகர் தனுஷின் வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி செளதரி, ராம்கி, சாய் குமார், ரித்விக் ஆகியோர் நடித்த லக்கி பாக்ஸர் திரைப்படம் தீபாவளி பண்டிகைகையொட்டி அக்டோபர் 31 ஆம் தேதி வெளியானது.

வங்கியில் பணிபுரியும் அதிகாரியான பாஸ்கர் (துல்கர் சல்மான்) பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசையில் அரசை, வங்கி நிர்வாகத்தை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார் என்கிற கதையாக உருவான இப்படம் இந்தியளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக, தமிழ் மற்றும் தெலுங்கில் படத்திற்குக் கிடைத்த வரவேற்பால் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டன.

இந்த நிலையில், லக்கி பாஸ்கர் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுவே துல்கர் சல்மானின் முதல் ரூ. 100 கோடி திரைப்படமாகும். சரியான பான் இந்திய நடிகர் என அடையாளப்படுத்தப்பட்ட துல்கர் சல்மான், தெலுங்கில் மகாநதி, சீதா ராமம் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக லக்கி பாஸ்கரிலும் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT