நடிகர் மாதவனின் புதிய படம் படம்: எக்ஸ் / ஐஎஃப்எஃப்ஐ
செய்திகள்

இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்படும் மாதவனின் புதிய படம்!

கோவாவில் நடைபெறும் 55ஆவது இந்திய திரைப்பட விழாவில் நடிகர் மாதவனின் புதிய படம் திரையிடப்படவிருக்கிறது.

DIN

கோவாவில் வரும் நவ.20 முதல் 28ஆம் தேதி வரை இந்திய திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது. முதல் படமாக பாலிவுட் நடிகர் ரந்தீப் ஹூடா நடித்த சாவர்க்கர் திரையிடப்படுகிறது.

இந்தத் திரைப்பட விழாவில் நடிகர் மாதவனின் புதிய படமும் திரையிடப்படவிருக்கிறது.

அஸ்வி தார் இயக்கியுள்ள ஹிஸாப் பராபர் படம். நவ.26ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு திரையிடப்பட இருக்கிறது. இந்தப் படத்தில் மாதவன் ராதே மோகன் சர்மா எனும் ரயில்வே டிக்கர் கலக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தனது வங்கிக் கணக்கில் சிறிய ஆனால் விளக்கமுடியாத முரண்பாடு இருப்பதை கண்டுபிடிக்கிறார். இந்த சிறிய பிரச்னை எப்படி மிகப்பெரிய விசாரணை வளையத்துக்குள் செல்கிறது என்பதுதான் படத்தின் கதை. மிகப்பெரிய வங்கித் திருடனான நீல் நிதின் முகேஷ் செய்த பண மோசடியை பற்றி விவரிக்கிறது.

ராதே மோகன் சர்மா தனது தனிப்பட்ட பிரச்னைகளுக்கு மத்தியில் சமூகத்தின் ஊழலை எதிர்த்து போராடுவார். இந்தப் படத்தை ஜியோ ஸ்டூடியோஸ் வழங்குகிறது. எஸ்பி சினிகார்ப் புரடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. கீர்த்தி குல்ஹரி உடன் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் திரையிடல் குறித்து இயக்குநர் கூறியதாவது:

இந்திய திரைப்பட விழாவில் எங்களது படம் திரையிடப்படுவது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. மேலும், இந்தப் படம் த்ரில்லர் வகையிலானது. உலகமே ஊழலில் திளைக்கும்போது உணைக்கான போராட்டம் இது.

நீதியை நிலைநாட்ட விரும்பும் சாதாரண மனிதனின் போராட்டத்தை இந்தப் படத்தில் காட்சிப்படுத்தியுள்ளோம். படம் முடிந்து வெளியே சென்றாலும் சரி, தவறுக்கு இடையேயான போராட்டங்களை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் என்றார்.

தமிழில் அறிமுகமான மாதவன் தற்போது ஹிந்தியில் பிஸியாக நடித்து வருகிறார். நயன்தாராவுடன் டெஸ்ட் படம் விரைவில் வெளியாகவுள்ளது.

கடைசியாக ஜோதிகாவுடன் நடித்த ஷைத்தான் படம் கமர்ஷியல் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ பரிசுத்தொகை அறிவிப்பு

பணமோசடி வழக்கு: அனில் அம்பானியின் ரூ.3,000 கோடி சொத்துகள் முடக்கம்!

ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7 பேர் பலி, 150 பேர் காயம்!

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! மீனவர்கள் 35 பேர் கைது

புதிய பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT