சீனாவில் வெளியாகும் மகாராஜா!
சீன மொழியில் மகாராஜா திரைப்படம் வெளியிடப்படவுள்ளது பற்றி...
நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் சீனாவில் வெளியாகவுள்ளது.
இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.
திரையரங்க வெளியீட்டிலேயே இப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படமானது. ஓடிடி வெளியீட்டிலும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
Advertisement
Advertisement
நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்தாண்டு வெளியான இந்தியப் படங்களிலேயே அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் மகாராஜா 2 (20 மில்லியன்) கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
இதையும் படிக்க : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்
மகாராஜா திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகவும், நடிகர் அமீர் கான் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், மகாராஜா திரைப்படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து சீனாவில் வருகின்ற 29ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.
இந்தப் படத்தை அலிபாபா குழுமம் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.