ஸ்ருதி ஹாசன், தனுஷ், பார்வதி திருவோத்து, நஸ்ரியா. 
செய்திகள்

ஸ்ருதி ஹாசன், பார்வதி, நஸ்ரியா... தனுஷுக்கு எதிராக திரும்பிய நடிகைகள்!

தனுஷுக்கு எதிரான நயன்தாராவின் அறிக்கை வைரலாகியுள்ளது...

DIN

நடிகர் தனுஷுடன் இணைந்து நடித்த நடிகைகள் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் சில ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில் கடந்த 2022 திருமணம் செய்துகொண்டனர். பிரம்மாண்டமாக நடைபெற்ற இத்திருமண நிகழ்வில் இந்தியளவில் கவனிக்கப்படும் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இதை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் பியாண்ட் தி ஃபேரி டேல் (beyond the fairy tale) என்கிற பெயரில் ஆவணப்படமாக உருவாக்கியுள்ளது. இதில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் நினைவுகளைப் பகிரும் காட்சிகளில் சில படங்களின் பாடல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. முக்கியமாக, நானும் ரௌடிதான் படப்பிடிப்பின்போது காதலிக்கத் துவங்கியதால் அப்படத்தின் பாடல்களையும் சில காட்சிகளையும் ஆவணப்படத்தில் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கின்றனர்.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக நானும் ரௌடிதான் படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் காப்புரிமைக்கான ஒப்புதலை அளிக்காமல் மோசமான முறையில் நடந்துகொள்வதாக நடிகை நயன்தாரா இன்று அறிக்கையின் மூலம் கூறியிருக்கிறார்.

இந்த அறிக்கை ரசிகர்களிடம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், மேடைக்கு மேடை அன்பை விதைக்கச் சொல்லும் தனுஷ், நயன்தாரா விஷயத்தில் நியாமற்ற முறையில் நடந்துகொண்டதாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, தனுஷுடன் இணைந்து நடித்த நடிகைகளான ஸ்ருதி ஹாசன் (3), பார்வதி (மரியான்), நஸ்ரியா (நய்யாண்டி), அனுபமா பரமேஸ்வரன் (கொடி), ஐஸ்வர்யா லட்சுமி (ஜகமே தந்திரம்) உள்ளிட்டோர் நயன்தாராவின் அறிக்கைக்கு விருப்பம் (லைக்) தெரிவித்ததுடன் நயன்தாராவுக்கு ஆதரவான வார்த்தைகளையும் பதிவிட்டுள்ளனர்.

தமிழின் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் மீது அடிக்கடி சர்ச்சைகள் எழும். ஆனால், இம்முறை நயன்தாராவிடமிருந்து நேரடி தாக்குதல் கிடைத்துள்ளது அதிர்வுகளைக் ஏற்படுத்தும் என்றே தெரிகிறது. உடன் நடித்த நடிகைகளே தனுஷுக்கு எதிரான பார்வையில் இருப்பதும் ரசிகர்களிடம் பல சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT