நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து கடந்த 2022, ஜூன் 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் திருமணம் செய்துகொண்டார்கள்.
இதன் விடியோவை நெட்பிளிக்ஸ் படமாக உருவாக்கியுள்ளது. இதில் நானும் ரௌடிதான் பட பாடல்களை புகைப்படத்தினை உபயோகிக்க தனுஷ் மறுத்துள்ளார்.
ரூ.10 கோடி கேட்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நடிகை நயன்தாரா தனுஷ் குறித்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து இன்ஸ்டாகிராமில் பதிவினை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிக்க: ரூ.10 கோடி கேட்டார்! தனுஷ் மீது நயன்தாரா பகிரங்க குற்றச்சாட்டு! என்ன பிரச்னை?
அதனைத் தொடர்ந்து இயக்குநரும் நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் இன்ஸ்டாவில் தனுஷ் குறித்து பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் இயக்குநர் விக்னேஷ் சிவன், “வாழு, வாழ விடு. ஓம் நமச்சிவாய. இவ்வளவு நாள் எல்லவற்றையும் நம்பியிருக்கும் அப்பாவியான ரசிகர்களுக்காக இதைச் சொல்கிறோம். மற்றவர்களின் மகிழ்ச்சியில் இன்பத்தை காணுமாறு மக்கள் மாறவேண்டுமென கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
மேலும் இதில் நடிகர் தனுஷ் பேசும் விடியோவுடன் தனுஷ் அனுப்பிய நோட்டீஸையும் வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.