காவ்யா தாபர் 
செய்திகள்

பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டேன்: காவ்யா தாபர்

நடிகை காவ்யா தாபர் தான் எதிர்கொண்ட பாலியல் சீண்டலைப் பகிர்ந்துள்ளார்.

DIN

நடிகை காவ்யா தாபர் தனக்கு நிகழ்ந்த பாலியல் அத்துமீறலைக் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்துவருபவர் காவ்யா தாபர். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே விளம்பர மாடலாகவும் நடித்து வந்தார். தமிழில் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ், பிச்சைக்காரன் - 2 படங்களில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய காவ்யா தாபர், “என் அப்பாவின் ஆசைக்காகவே சினிமாவிற்கு நடிக்க வந்தேன். சினிமாவில் முயன்றுகொண்டிருந்த காலத்தில் விளம்பர மாடலாக இருந்தேன். அப்போது, இயக்குநர் ஒருவர் அவருடைய அலுவலகத்திற்கு ஆடிஷனுக்காக அழைத்திருந்தார். அங்கு சென்றதும், என்னிடம் பாலியல் ரீதியான சலுகைகளை எதிர்பார்த்தார்.

காவ்யா தாபர்

ஆசைக்கு ஒத்துழைத்தால் 4 பட வாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகவும் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நான் அதை மறுத்துவிட்டேன்.” என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விற்பனையில் சாதனை படைத்த மெர்சிடிஸ் பென்ஸ்!

ஆண்டின் முதல் சூப்பர் மூன்... இன்றிரவில் மிகப் பிரகாசமாக ஒளிரும் நிலவு!

தாய்லாந்திலிருந்து... ராய் லட்சுமி!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சி: ராகுல் காந்தி கண்டனம்!

பார்த்தேன் ரசித்தேன்... நபா நடேஷ்!

SCROLL FOR NEXT