இயக்குநர் பாலாவுடன் அருண் விஜய். 
செய்திகள்

‘வணங்கான்... கனத்த இதயத்துடன்...’ அருண் விஜய்யின் திடீர் பதிவு!

வணங்கான் குறித்து அருண் விஜய்யின் பதிவு...

DIN

நடிகர் அருண் விஜய் வணங்கான் திரைப்படம் குறித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் வணங்கான். இதன் படப்பிடிப்பை பல நாள்களாக நடத்தி சில மாதங்களுக்கு முன் படமும் வெளியீட்டிற்குத் தயாரானது. ஆனாலும், படம் இன்னும் வெளியாகவில்லை.

டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தணிக்கை வாரியம் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கி ஒரு சில மாதங்களுக்கு மேல் ஆகியும் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படாமல் இருக்கிறது.

இந்த நிலையில், அருண் விஜய் தன் குடும்பத்தினருடன் வணங்கான் படத்தின் சிறப்பு திரையிடலைப் பார்த்ததும் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “மன நெகிழ்வுடனும் கனத்த இதயத்துடனும், என் இயக்குநர் பாலா சார் அவர்களுக்கு, நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து, உங்கள் படைப்புகளின் ரசிகனாகவும், உங்களைக் கண்டு வியந்து, நேசித்து, ஒரு நடிகனாக "எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா" என ஏங்கியவனுக்கு தங்களின் இயக்கத்தில் பணியாற்ற 'வணங்கான்' படத்தின் மூலம் வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

நம் படப்பிடிப்பின் பொழுது கூட இக்கதையின் பாதிப்பை நான் முழுமையாக உணரவில்லை. ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித்திரையில் காண்கையில், என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன். எனது திரையுலக பயணத்தில், வணங்கான் ஒரு மிக முக்கியமான பாகமாக அமையும் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகமில்லை!

சிறப்பு திரையிடலில் தன் குடும்பத்தினர் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியுடன் அருண் விஜய்.

இப்படைப்பின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, பக்க பலமாக இருந்து கொண்டிருக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். மக்கள் அனைவரும் இப்படத்தை விரைவில் திரையில் காணும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும்... உங்கள் அருண் விஜய்.” எனத் தெரிவித்துள்ளார்.

இப்படத்தை அடுத்தாண்டு (2025) பொங்கல் வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெற்றி கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புற்றுநோய், அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைப்புக்கு ஐஎம்ஏ வரவேற்பு

அனைத்து பயிா்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

பாதை தவறுகிறோம்...

SCROLL FOR NEXT