பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி படம் | எக்ஸ்
செய்திகள்

பிக் பாஸ் 8: வி.ஜே. விஷாலைத் தோற்கடித்து கேப்டனானார் மஞ்சரி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார கேப்டனாக பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி தேர்வாகியுள்ளார்.

DIN

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார கேப்டனாக பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி தேர்வாகியுள்ளார்.

கடந்த இரு வாரங்களாக ஆண்கள் அணியில் இருந்தவர்கள் கேப்டனான நிலையில், இந்த வாரம் பெண்கள் அணியைச் சேர்ந்தவர் கேப்டனாகியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்துள்ளது. 6வது வாரத் தொடக்கத்தில் குறைந்த வாக்குகளைப் பெற்ற ரியா வெளியேற்றப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து இந்த வாரத்தின் கேப்டனாக யாரைத் தேர்வு செய்வது என்ற போட்டி நடைபெற்றது. ஆண்கள் அணியில் இருந்து விஜே விஷாலும், பெண்கள் அணியிலிருந்து மஞ்சரியும் கேப்டன் பொறுப்புக்கான போட்டியில் பங்கேற்றனர்.

கடந்த இரு வாரங்களாக ஆண்கள் அணியிலிருந்தவர்களே கேப்டன்களாக பொறுப்பேற்று பிக் பாஸ் வீட்டை வழிநடத்தினார்கள். இதனால் இந்த வாரம் பெண்கள் அணியிலிருந்து ஒருவர் கேப்டனாக வேண்டும் என்ற முனைப்புடன் பெண்கள் அணியினர் இருந்தனர்.

கடும் போட்டி

கரண்டியில் எலுமிச்சை பழத்தை ஏந்தியவாறு வாயில் வைத்துக்கொண்டு நடக்க வேண்டும். யார் நீண்ட நேரம் எலுமிச்சைப் பழத்தை விழாமல் வைத்துள்ளாரோ அவரே இப்போட்டியின் வெற்றியாளார். வெற்றி பெற்றவர் பிக் பாஸ் வீட்டின் இந்த வார கேப்டனாக செயல்படலாம். அவரை யாரும் நாமினேட் செய்ய இயலாது.

இந்நிலையில், பெண்கள் அணியிலிருந்து கேப்டன் பொறுப்புக்கான போட்டியில் பங்கேற்ற மஞ்சரி, 16 மணிநேரம் பிரசவ வலியை அனுபவித்திருக்கிறேன். அதனால் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் போட்டிகளில் ஏற்படும் வலிகள் எனக்குப் பெரிதல்ல எனக் கூறி போட்டியில் பங்கேற்றார்.

பலமணிநேரத்துக்கு போட்டி நீடித்தது. இருவரும் கரண்டியிலுள்ள எலுமிச்சைப் பழத்தை கீழே விழாதவாறு வாயில் பிடித்துக்கொண்டு நடந்துகொண்டிருந்தனர். ஒருகட்டத்தில், விஜே விஷால் தோற்றதால், இந்த வாரத்தின் கேப்டனாக மஞ்சரி தேர்வானார்.

இதையும் படிக்க | புகழ் இல்லாதது என் குற்றமா? பிக் பாஸ் எலிமினேஷனுக்குப் பிறகு ரியா எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

தடக் 2: அமோக வரவேற்பில் ஹிந்தி பரியேறும் பெருமாள்!

“முதல்வர் மீது Thiruma-வுக்கு நம்பிக்கை இல்லை!”: Nainar Nagendran | DMK | VCK

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் MK Stalin! | DMK

“நம் சமுதாய அமைப்பு அப்படி!” ஆணவக்கொலைகள் குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பதில்!

SCROLL FOR NEXT