முகப்பு
செய்திகள்

கூலி படப்பிடிப்பில் ஸ்ருதி ஹாசன்!

மீண்டும் படப்பிடிப்பில் இணைந்தார் ஸ்ருதி ஹாசன்...

Updated On : 18 நவம்பர், 2024 at 12:46 PM
ஸ்ருதி ஹாசன்
பகிர்:

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி படத்தின் சென்னை படப்பிடிப்பில் ஸ்ருதி ஹாசன் இணைந்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தை தொடர்ந்து சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertisement

இப்படப்பிடிப்பில் நடிகர் அமீர் கான் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

கூலி திரைப்படத்தை அடுத்தாண்டு மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடிகை ஸ்ருதி ஹாசன் இணைந்துள்ளார். இதைக் குறிப்பிடும் வகையில், மேக்கப் செய்துகொள்ளும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்படத்தில் பிரீத்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.