ராம் சரணுடன் சிறப்பு நடனமாடும் ஸ்ருதி ஹாசன்!
பெத்தில் சிறப்பு நடனமாடும் ஸ்ருதி....
பெத்தி திரைப்படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடித்த பெத்தி திரைப்படம் ஏப். 30 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், இப்படத்தை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே ஒருமுறை வெளியீட்டில் மாற்றம் கண்ட இப்படம் மீண்டும் தள்ளிச்சென்றுள்ளது ரசிகர்களிடம் குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்த இப்படத்தின் முதல் பாடலான சிக்கிரி பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது.
இந்த நிலையில், இப்படத்தின் கவர்ச்சிப் பாடல் ஒன்றிற்கு முதலில் சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர் மறுத்ததாகக் கூறப்படுகிறது. தற்போது, இந்தப் பாடலுக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் சிறப்பு நடனமாட ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெத்தியில் ராம் சரணுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Reports have emerged that actress Shruti Haasan has joined the film peddi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.