முகப்பு
செய்திகள்

மம்மூட்டி - மோகன்லால் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கின்றனர்...

Updated On : 19 நவம்பர் 2024, 12:57 pm IST
நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால், குஞ்சக்கோ போபன்.
பகிர்:

நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

மலையாளத்தில் முன்னனி நடிகர்களாக இருக்கும் மம்மூட்டி, மோகன்லால் இருவரும் தயாரிப்பு நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். தங்களின் படங்களை இவர்களே தயாரித்தும் வெளியிடுகின்றனர்.

தற்போது, மம்மூட்டி அவரின் தயாரிப்பிலேயே ஒரு படத்தில் நடித்து வருகிறார். விநாயகன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மம்மூட்டி வில்லனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

அதேபோல், நடிகர் மோகன்லால் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் எம்புரான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மோகன்லாலின் ஆஷிர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதையும் படிக்க: அமரன் ரூ. 300 கோடி வசூல்?

சில நாள்களுக்கு முன், ‘டேக் ஆஃப்’, ‘மாலிக்’ படங்களின் இயக்குநர் மகேஷ் நாராயண் இயக்கத்தில் நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தையும் இவர்கள் இருவருமே தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் துவங்கவுள்ளது. படப்பிடிப்பில் நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால், குஞ்சக்கோ போபன் ஆகியோர் கலந்துகொண்டு நடித்து வருகின்றனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக மம்மூட்டி கம்பெனி நிறுவனம் இவர்கள் இணைந்திருக்கும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

மலையாள சினிமாவின் இருபெரும் ஆளுமைகளாகக் கருதப்படும் நடிகர்கள் இணைந்து நடிக்க வேண்டும் என்கிற நீண்ட நாள் ஆசை நிறைவேறப்போவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மம்மூட்டியும் மோகன்லாலும் இறுதியாக கடந்த 2008 ஆம் ஆண்டு ’டிவெண்டி: 20’ என்கிற மலையாளப் படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.