ஏஜிஎஸ் உடன் இணைந்த சந்தானம்..! புதிய படம் அறிவிப்பு!
நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் குறித்து...
நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு ‘லவ் பைட்’ - (Love Bite) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தினை கான்ஜூரிங் கண்ணப்பா படத்தை இயக்கிய செல்வின் ராஜ் சேவியர் இயக்குகிறார்.
நகைச்சுவை நடிகராக இருந்து முதன்மை நாயகனாக சந்தானம் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் படத்தில் மாறினார். தில்லுக்கு துட்டு, ஏ1, டிடி ரிட்டென்ஸ் என பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
கடைசியாக இவரது நடிப்பில் டெவிஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் என்ற படம் வெளியானது. சர்வர் சுந்தரம் படம் வெளியாகமலேயே இருக்கிறது.
இந்த நிலையில், மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் தயாரிப்பின் 29ஆவது படத்தில் சந்தானம் நடித்து வருகிறார். லவ் பைட் என்ற இந்தப் படமும் பேய்ப் படமாக இருக்கும்போல் போஸ்டர் வெளியாகியுள்ளது.
AGS 29 film with Santhanam titled as Love Bite
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.