முகப்பு
செய்திகள்

ஹிந்தியில் ரீமேக்காகும் பேபி! நாயகனாகும் பிரபல நடிகரின் மகன்?

பேபி திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுவது குறித்து...

Updated On : 24 நவம்பர், 2024 at 12:24 PM
பகிர்:

தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பேபி திரைப்படம் ஹிந்தியில் ரீமேக்காக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சாய் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா, வைஷ்ணவி, விராஜ் அஸ்வின் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘பேபி’. 

காதலியால் ஏமாற்றத்துக்கு உள்ளாகும் நாயகனின் கதையாக உருவான இப்படம் கடந்தாண்டு ஜூலை 14 ஆம் தேதி தெலுங்கில் வெளியானது. 

ரூ.7 கோடியில் தயாரான ‘பேபி’ உலகளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமானது.

விஜய் தேவரகொண்டாவுக்கு ‘அர்ஜுன் ரெட்டி’ கைகொடுத்ததுபோல் ஆனந்த் தேவரகொண்டாவுக்கு ‘பேபி’ வெளிச்சத்தைக் கொடுத்தது.

பாபில் கான்

இந்த நிலையில், பேபி படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாகவும் நாயகனாக மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கானின் மகன் பாபில் கான் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்கில் இப்படத்தை இயக்கிய சாய் ராஜேஷ், ஹிந்தியிலும் படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.