அருண் பிரசாத் / முத்துக்குமரன் படம் | எக்ஸ்
செய்திகள்

பிக் பாஸ் 8: முத்துக்குமரனுக்கு எதிராக மாறிய அருண் பிரசாத்!

முத்துக்குமரன் - சாச்சனா இடையே இருப்பது, அற்புதமான உறவு என்றும், இதனைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவது அர்த்தமற்றது

DIN

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் பெண்கள் அணியில் அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம். இதைப்போன்று ஆண்கள் அணியிலும் இருவர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

முத்துக்குமரன் சாச்சனாவுக்கு ஆதரவாகப் பேசுவதால் ஆத்திரமடைந்த அருண், முத்துக்குமரன் குறித்து ஆண்கள் அணியில் அவதூறாகப் பேசுகிறார்.

தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, தன்னை நல்லவன் எனக் காட்டிக்கொள்ள முத்துக்குமரன் எந்த எல்லைக்கும் செல்வான் என ரஞ்சித்திடன் அருண் பிரசாத் புலம்புகிறார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 48 நாள்களைக் கடந்துள்ளது. ஆண்கள் - பெண்கள் என இரு தரப்பினர் இடையே போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் பெண்கள் அணியில் உள்ள சாச்சனாவுக்கு முத்துக்குமரன் நல்ல நண்பனாகத் திகழ்கிறார். அவ்வபோது சகோதரனாக இருந்து சாச்சனாவின் குறைகளை சுட்டிக்காட்டுகிறார்.

ஆனால், சாச்சனா முத்துக்குமரனிடம் பேசுவதே அவர்களின் விளையாட்டு யுக்தி என்றும், ஆண்கள் அணியிலிருந்து தகவலை எடுத்துக்கொண்டு செல்வதற்காகவே முத்துவிடம் பேசுவதாகவும் அருண் பிரசாத் குற்றம் சாட்டுகிறார்.

சாச்சனாவுக்கு ஆறுதலாக முத்துக்குமரன்

இந்நிலையில், நேற்று சாச்சனா அழும்போது பெண்கள் அணியில் உள்ள அனைவரும் அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்கின்றனர். ஆனால், சாச்சனா எனக்கு முத்து அண்ணனிடம் பேச வேண்டும்போல உள்ளது எனக் கூறுகிறார்.

பின்னர், ஆண்கள் பக்கமிருக்கும் முத்துக்குமரன் பெண்கள் வீட்டிற்கு வரும்போது, அவரைக் கட்டியணைத்து அழுகிறார் சாச்சனா. சகோதரனாக அவருக்கு ஆறுதல் கூறுகிறார் முத்துக்குமரன்.

ஆனால், இதனை விரும்பாத அருண் பிரசாத், தன்னை நல்லவன் எனக் காட்டிக்கொள்வதற்காக முத்து இதையெல்லாம் செய்வதாக விமர்சிக்கிறார். தன்னை காப்பாற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் முத்துக்குமரன் செல்வான். பொதுமக்கள் பார்த்துக்கொண்டு உள்ளனர். அவனுடைய முகம் ஒருநாள் கிழியும் எனக் குறிப்பிடுகிறார்.

இந்த விடியோவுக்கு பலரும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். முத்துக்குமரன் - சாச்சனா இடையே இருப்பது, அற்புதமான உறவு என்றும், இதனைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவது அர்த்தமற்றது எனவும் ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | கணவருக்காக பரிசுகளை அனுப்பிய மனைவி! பிக் பாஸ் வீடு தேடி வந்த ஆச்சரியம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT