தன் காதலருடன் கீர்த்தி சுரேஷ் 
செய்திகள்

காதலரை அறிவித்தார் கீர்த்தி சுரேஷ்!

கீர்த்தி சுரேஷ் தன் காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்...

DIN

நடிகை கீர்த்தி சுரேஷ் தன் காதலரை முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளார்.

மலையாள தயாரிப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ். தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'இது என்ன மாயம்' என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினிமுருகன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி (நடிகையர் திலகம்) திருப்புமுனையாக அமைந்தது. பிறகு  விஜய், சூர்யா, ரஜினி போன்ற முன்னிணி நடிகர்களின் படங்களிலும் நடித்தார். 

இதையும் படிக்க: சூர்யா - 45 பூஜை!

தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார்.

இதற்கிடையே, கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரான ஆண்டனியை காதலிப்பதாகவும், இந்த காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில், இதனை உறுதிப்படுத்தும் விதமாக கீர்த்தி சுரேஷ் காதலருடன் இணைந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “15 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். எப்போதும் தொடரும்” என தெரிவித்ததுடன் காதலர் ஆண்டனிதான் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இங்கிலாந்தின் தோல்வியை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது: கெவின் பீட்டர்சன்

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

SCROLL FOR NEXT