அம்மாவுக்கு புது வீடு கட்டி பரிசளித்த நடிகை சோனியா சுரேஷ்!
பெற்றோருக்கு நடிகை சோனியா சுரேஷ் புதிய வீடு கட்டி பரிசளித்தது குறித்து...
நடிகை சோனியா சுரேஷ் புதிதாக வீடு கட்டி குடிபெயர்ந்துள்ளார். அந்த வீட்டை தனது தாய் - தந்தைக்கு பரிசாக அளித்துள்ளார்.
தனது சகோதரியுடன் சேர்ந்து புதிய வீட்டைக் கட்டியுள்ள சோனியா சுரேஷ், முழுக்க முழுக்க தனது உழைப்புக்கு கிடைத்த பரிசு எனக் குறிப்பிட்டுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1.30 மணிக்கு புது வசந்தம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரின் நாயகியாக சோனியா சுரேஷ் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ஷியாம் ஜி நடிக்கிறார்.
Advertisement
Advertisement
2023 முதல் ஒளிபரப்பாகிவரும் இத்தொடரில் நடித்து வருவதன் மூலம் ரசிகர்களைக் கவர்ந்துள்ள சோனியா சுரேஷ், சமூக வலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவர்.
வசீகரமான தோற்றத்தாலும் குடும்பப்பாங்கான நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள இவர், தெலுங்கில் உப்பென்னா என்ற தொடரிலும் நடித்துள்ளார்.
சிறு வயதிலிருந்தே நடிப்புத் துறையில் இருந்து வந்தாலும் இடையில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்கச் சென்றார். பின்னர் படிப்பை முடித்த பிறகே மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.
இந்நிலையில், தனது நீண்ட நாள் கனவாக இருந்த சொந்த வீட்டை சோனியா சுரேஷ் கட்டி முடித்துள்ளார். இதன் புதுமனை புகுவிழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த வீட்டை தனது பெற்றோருக்கு பரிசளிப்பதாக சோனியா குறிப்பிட்டுள்ளர்.
புது வீட்டில் பெற்றோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரசிகர்களுடன் சோனியா பகிர்ந்துள்ளார். சின்ன திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Actress Sonia Suresh built a house and gifted it to her mother
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.