கீர்த்தி சுரேஷ் நடித்த அக்கா டிரைலர்!
கீர்த்தி சுரேஷின் அக்கா டிரைலர் வெளியானது...
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான அக்கா தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது.
யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘அக்கா’, பெண்களை மையமாகக் கொண்ட கேங்ஸ்டர் கதை. நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த இத்தொடரை எழுதி, இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி.
1980-களின் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘அக்கா’, தலைமுறை தலைமுறையாகப் பெண்களால் கட்டமைக்கப்பட்டு, ஆளப்பட்டு, பாதுகாக்கப்பட்ட பெர்னூரு என்ற கற்பனை உலகத்தை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.
Advertisement
Advertisement
அக். 30 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகும் இத்தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ் தனக்கென பெண்கள் கூட்டத்துடன் வாழ, அதனை அழிக்கும் வில்லியாக ராதிகா ஆப்தே நடித்திருப்பது டிரைலர் காட்சிகளில் தெரிகிறது.
The trailer of the series Akka, starring actress Keerthy Suresh, has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.