FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

எக்ஸ் பக்கத்தில் கணக்கு தொடங்கினாா் சோனியா காந்தி: முதலில் பகிா்ந்த காதல் கதை!

எக்ஸ் பக்கத்தில் கணக்குத் தொடங்கிய சோனியா காந்தி, ராஜீவ் காந்தியை சந்தித்தது பற்றி பகிர்ந்துள்ளார்.

24 அக்டோபர் 2026, 3:30 pm
சோனியா காந்தி - கோப்புப் படம்
பகிர்:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் சோனியா காந்தி, எக்ஸ் எனப்படும் சமூக வலைதளப் பக்கத்தில் தனது கணக்கைத் தொடங்கி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடனான தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

சோனியா காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தைத் தொடங்கி, அதில், ராஜீவ் காந்தியை கேம்பிரிட்ஜில் உள்ள க்ரீக் உணவகத்தில் முதல்முறையாக தான் சந்தித்தது பற்றிய அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

கேம்ப்ரிட்ஜில் உள்ள ஒரு சிறிய க்ரீக் உணவகத்தில்தான் என்னுடைய காதல் பயணம் தொடங்கியது. காதல், மகிழ்ச்சி மற்றும் நினைவுகளைக் கொண்ட ஒரு உலகத்தை ராஜீவும் நானும் உருவாக்கினோம், அது உலகத்தை, நவம்பர் 10ஆம் தேதி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று பதிவிட்டு விடியோவை இணைத்துள்ளார்.

Advertisement

Advertisement

சோனியா காந்தியின் ‘பிலாங்கிங்: ஏ ஜா்னி ஆஃப் லவ்’ என்ற புத்தகம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில், சமூக வலைத்தளப் பக்கங்களில் கணக்குகளைத் தொடங்கி அது பற்றிய தகவல்களையும் பகிர்ந்து வருகிறார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சமூக வலைத்தளங்களில் ஈடுபாடு காட்டாமல் இருந்த நிலையில், இன்று எக்ஸ் பக்கத்தில் கணக்குத் தொடங்கியிருக்கிறார். அதுபோலவே, சோனியா காந்தி இதுவரை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்குகளைத் தொடங்காமல் இருந்தாா். அவரின் விடியோ, அறிக்கை உள்ளிட்டவை காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டு வந்தன.

இந்த நிலையில், சோனியா காந்தி இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் தனது கணக்கை வியாழக்கிழமை தொடங்கினாா். அதில் முதல் பதிவாக தனது ‘பிலாங்கிங்: ஏ ஜா்னி ஆஃப் லவ்’ என்ற புத்தகம் குறித்த விடியோவைப் பகிா்ந்தாா். அந்த விடியோவில் புத்தகத்தின் முதல் பதிப்பை சோனியா காந்தி பெறும் காட்சியும், இனிப்புகளை மகள் பிரியங்கா காந்தியுடன் பகிரும் காட்சியும் இருந்தன.

அந்தப் புத்தகத்தில் ஏராளமான அரிய புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பதாக சோனியா காந்தி பதிவிட்டிருந்தார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தொடங்கியதும், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கங்களைத் தொடர ஆரம்பித்தாா். இதைத் தொடா்ந்து, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் உயா்நிலைத் தலைவா்கள் அனைவரும் சோனியா காந்தியின் இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடர ஆரம்பித்தனா். இதேபோல் பல ஆயிரம் போ் அவரின் கணக்கை சில மணி நேரத்தில் தொடர ஆரம்பித்தனா்.

சோனியா காந்தியின் புத்ககம் வரும் நவம்பா் 10-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

summary

Sonia Gandhi opens an account on X: Shares a love story as her first post!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments