மிஸ் யூ திரைப்பட ரிலீஸ் ஒத்திவைப்பு!
நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ் யூ திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்தாண்டு வெளியான சித்தா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அடுத்து வெளியான இந்தியன் 2 திரைப்படம் சமூக வலைதளங்களில் மோசமான விமர்சனங்களைப் பெற்றன.
தற்போது, காதல் படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். படத்திற்கு மிஸ் யூ எனப் பெயரிட்டுள்ளனர்.
இந்தப் படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்டு புரடக்ஷன்ஸ் தயாரிக்க, ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற படங்களை இயக்கிய என். ராஜசேகர் இதை இயக்கியுள்ளார்.
Advertisement
Advertisement
தெலுங்கு, கன்னடத்தில் புகழ்பெற்ற ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்தப் படத்தில் 8 பாடல்களை இசையமைத்துள்ளார்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியீட்டில் தமிழகமெங்கும் ’மிஸ் யூ’ திரைப்படம், நவம்பர் 29 ஆம் தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மழையின் காரணமாக வெளியீட்டை ஒத்திவைத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ”அடுத்த ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும். இது கடினமான முடிவென்றாலும் ரசிகர்களின் நலனைக் கருத்தில்கொண்டு எடுக்கப்பட்டது. உங்களை மிஸ் செய்கிறோம்” என படக்குழு கூறியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.