ஷாகித் கபூர், பூஜா ஹெக்டே 
செய்திகள்

ஷாகித் கபூர், பூஜா ஹெக்டேவின் தேவா: ரிலீஸ் தேதி மாற்றம்!

நடிகர் ஷாகித் கபூர், பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள தேவா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

DIN

தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே, பீஸ்ட்டில் பலரின் மனதில் இடம் பிடித்தார். 

இதற்கு நடுவில் தெலுங்கு திரையுலகிலும் ஹிந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் அல வைகுந்தபுரம்லு திரைப்படத்தில் நடித்து தென்னிந்திய நடிகையாக மாறினார். 

அதனைத் தொடர்ந்து பிரபாஸுடன் ராதே ஷ்யாம், சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.  இதேபோன்று பாலிவுட்டிலும் ’மொஹஞ்சதாரோ', ‘சர்க்கஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கான இடத்தைப் பிடித்திருந்தார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து முடித்துள்ளார். பாலிவுட்டில் ஷாகித் கபூருடன் தேவா என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகிவரும் தேவா படம் 2025ஆம் ஆண்டு காதலர் தினத்துக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் படம் வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, பூஜா ஹெக்டே விஜய்யின் 69 படத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷப ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தில்லியில்... 2024-ல் மூச்சு பிரச்னையால் 9,000 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிர தேர்தலில் முறைகேடு: தேர்தல் அதிகாரியை இடைநீக்கம் செய்ய வலியுறுத்தல்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை!

எம்.எஸ்.வி., முதல் அனிருத் வரை : விரும்பி கேட்கும் பாடல்கள் குறித்து மு.க. ஸ்டாலின் பேச்சு!

SCROLL FOR NEXT