ஃபார்ஸி - 2 பணிகள் துவக்கம்!
ஃபார்ஸி - 2 இணையத் தொடர் பணிகள் ஆரம்பம்....
ஷாகித் கபூர், விஜய் சேதுபதி நடிக்கும் ஃபார்ஸி - 2 இணையத் தொடரின் பணிகள் துவங்கியுள்ளன.
ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்கிய இணையத் தொடரான தொடர் 'ஃபார்ஸி' கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியாகி பெரிய கவனத்தைப் பெற்றது.
இதில் கள்ளநோட்டு அச்சடிக்கும் நாயகனாக ஷாகித் கபூரும் அவரைப் பிடிக்கும் காவல்துறை அதிகாரியாக விஜய் சேதுபதி நடித்திருந்தனர்.
சுவாரஸ்யமும் பரபரப்பான திரைக்கதையாலும் இத்தொடர் மிகப்பெரிய ஹிட் அடித்ததுடன், பலரிடமும் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், இதன் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் துவங்கியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால், ஃபார்ஸி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
summary