காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் ஷாகித் கபூர் திரைப்படம்!
பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரின் புதிய திரைப்படம் குறித்து...
பிரபல பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சஜித் நதியவாலா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தினை விஷால் பரத்வாஜ் இயக்கியுள்ளார்.
ஓ ரோமியோ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அனிமல் படத்தில் கவனம் ஈர்த்த திரிப்தி டிம்ரி இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்தப் படத்தின் டிரைலர் நாளை (ஜன.10) வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் வரும் பிப்.13ஆம் தேதி வெளியாகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.
மும்பை போலிஸ் எனும் படத்தினை ரீமேக் செய்து தேவா எனும் படத்தில் நடித்திருந்தார்.
கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படத்துக்குப் பிறகு ஓ ரோமியா, காக்டைல் 2 என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இதில் ஓ ரோமியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், காக்டைல் 2 படத்தில் நடித்து வருகிறார்.
The release date of the new film starring popular Bollywood actor Shahid Kapoor has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.