ஓ ரோமியோ படத்தில் திஷா பதானியின் கவர்ச்சி நடனம்!
நடிகர் ஷாகித் கபூரின் ஓ ரோமியோ படத்தின் பாடல் குறித்து...
நடிகர் ஷாகித் கபூரின் ஓ ரோமியோ படத்தின் கவர்ச்சியான பாடல் விடியோ வெளியாகியுள்ளது.
இந்தப் பாடலில் திஷா பதானி, ஷாகித் கபூரின் நடன அசைவுகள் வைரலாகி வருகின்றன.
இயக்குநர் விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரின் புதிய திரைப்படமான ஓ ரோமியோவின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
இந்தப் படம் வரும் பிப்.13ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தை சஜித் நதியவாலா தயாரிக்க, அனிமல் படத்தில் கவனம் ஈர்த்த திரிப்தி டிம்ரி இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் அவினாஷ் திவாரி, விக்ராந்த் மாஸி, நானா படேகர், தமன்னா பாட்டியா, திஷா பதானி ஆகியோர் நடித்துள்ளார்கள்.
இந்தப் பாடலில் நடிகர் ஷாகித் கபூரின் மூன் வாக் நடன அசைவுகளும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
The glamorous music video of actor Shahid Kapoor's film 'O Romeo' has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.