FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஏ. ஆர். ரஹ்மானுக்குச் சென்ற தேவாவின் வாய்ப்பு... மனம் திறந்த ரஜினிகாந்த்!

இசையமைப்பாளர் தேவா குறித்து ரஜினிகாந்த் விடியோ வெளியிட்டுள்ளார்...

17 அக்டோபர் 2026, 4:32 pm IST
நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் தேவா.
பகிர்:

நடிகர் ரஜினிகாந்த் மறைந்த இசையமைப்பாளர் தேவா குறித்து விடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவா. ரசிகர்களால் தேனிசைத் தென்றல் தேவா என அன்புடன் அழைக்கப்பட்டவர். இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான் ஆகியோரின் ஆதிக்கம் இருந்த போது தனக்கான தனித்துவமான இசையமைப்பின் மூலம் ரசிகர்களிடம் அதிகம் சென்றடைந்தார். தேவாவின் கானா பாடல்களுக்கு எல்லா தலைமுறையிலும் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில், மாரடைப்பு காரணமாக தேவா இன்று உயிரிழந்தார். இவரது திடீர் மறைவுக்குப் பலரும் அஞ்சலி, இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று தேவா குடும்பத்தினருக்கு இரங்கல்களைத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

தற்போது, ரஜினிகாந்த் பேசிய விடியோவும் வெளியாகியுள்ளது. இதில், “இசையமைப்பாளர் தேவா என்னுடைய அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் ஆகிய மூன்று திரைப்படங்களுக்கு இசையமைத்தார். மூன்றும் மிகப்பெரிய வெற்றிப்படங்களாகின. ஆனால், நண்பர்கள் படையப்பா திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மானை ஒப்பந்தம் செய்யுங்கள் என்றனர். நான் அரை மனதாக தேவாவிடம், ‘ஏ. ஆர். ரஹ்மானை ஒப்பந்தம் செய்யச் சொல்கின்றனர். நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ள கூடாது’ என்றேன். இதனைக் கேட்ட தேவா எழுந்து என் கையைப் பிடித்துக்கொண்டு, ‘ரஹ்மான் நல்ல பையன். இப்போது வளர்ந்து வருகிறார். அவருடன் நீங்கள் பணியாற்றுவது எனக்கு மகிழ்ச்சியானது. சந்தோஷமாகவே சொல்கிறேன்.’ என்றார். தேவா மிகச்சிறந்த மனிதர். ஆரம்ப காலங்களில் கடுமையாக கஷ்டப்பட்டவர். தன் தம்பிகளையும் அவர்களின் குடும்பத்தையும் மூத்தவராக இருந்து இறுதிவரை விடாமல் பார்த்துக்கொண்டார்.

சில ஆண்டுகளுக்கு முன் இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதனை நான் தொடங்கி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மகிழ்ச்சியாக அதில் கலந்துகொண்டு அவரது இசைப்பயண நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தேன். மிகச்சிறப்பாக பல நாடுகளில் நடத்தி வந்தார். என்னிடம், ‘நல்ல வரவேற்பு இருக்கிறது. இன்றைய இளைஞர்களும் கூட்டமாகக் கலந்துகொண்டு கொண்டாடுகிறார்கள். இந்த சந்தோஷமே என்னை இன்னும் 15 ஆண்டுகள் வாழச் செய்துவிடும்’ என்றார். மிக நல்லவனாக இருக்கிறாய் மேலே வா என இறைவன் அழைத்துக்கொண்டார். தேவாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Actor Rajinikanth has released a video regarding the late music composer Deva.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments