இசையமைப்பாளர் தேவா காலமானார்!
சினிமா துறையில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும், பாடகருமான தேவா காலமானார்!
தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான தேவா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 75.
கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவா மாரடைப்பால் காலமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கானா பாடல் என சென்னையின் பட்டிதொட்டிகளில் மட்டும் ஒலித்து வந்த இசையை, திரையிசைப் பாடல்கள் மூலம் உலகப்புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற இசையமைப்பாளர் தேவாவின் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
Advertisement
Advertisement
தேனிசைத் தென்றல் என அவரது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் தேவா. சினிமா துறைக்கு வருவதற்கு முன்பே, அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இசையமைத்துக் கொண்டிருந்தார். 1990களில் சிறந்த இசையமைப்பாளராக கொடிகட்டிப் பறந்தவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.