தேவா அண்ணன் உண்மையிலேயே தென்றல்தான்: வடிவேலு
தேவா மறைவுக்கு வடிவேலு இரங்கல்...
இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு நடிகர் வடிவேலு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் தேவா மாரடைப்பு காரணமாக நேற்று (அக். 17) சென்னையில் உயிரிழந்தார். இவரது திடீர் மறைவுக்குப் பலரும் அஞ்சலி, இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்கள் நேரில் சென்று தேவா குடும்பத்தினருக்கு இரங்கல்களைத் தெரிவித்தனர்.
தேவாவின் உடல் இன்று ஆற்காடு அருகே அவரது சொந்த ஊரான சக்கரமல்லூர் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில், நடிகர் வடிவேலு விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
இதில், “இசையமைப்பாளர் தேவா அண்ணன் திடீரென மறைந்தது உண்மையிலேயே அதிர்ச்சியாக இருக்கிறது. மிக நல்ல மனிதர். என்னைப் பார்த்தால் வாங்க வடிவேலு தம்பி என அன்புடன் அழைத்துப் பேசுவார். மொத்த குடும்பத்திற்கும் ஒரே ஆளாக அனைவரையும் நன்றாகப் பார்த்துக்கொண்டார். அவர் இறந்ததும் அக்குடும்பத்தினர் அழுவதைக் கண்டால் நம் குடும்பத்தில் ஒருவருக்கு ஆனது போல் இருக்கிறது. தேவா அண்ணன் மறைந்தது என் மனதை மிகவும் தொந்தரவு செய்கிறது. அண்ணனின் குடும்பம் எப்போதும் தைரியமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும்.” எனத் தன் இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.
Actor Vadivelu has expressed his condolences on the demise of music composer Deva.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.