FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தேவா மறைவு! ஆளுநர் ஆர்லேகர் இரங்கல்!

புகழ்பெற்ற இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு ஆளுநர் இரங்கல்..

17 அக்டோபர் 2026, 12:04 pm IST
இசையமைப்பாளர் தேவா - file photo
பகிர்:

தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான தேவா சென்னையில் இன்று காலமானார். அவருக்குத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்லேகர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர். கானா பாடல்களைப் படுவதில் வல்லவரான இவர் மாட்டுக்கார மன்னாரு திரைப்படம் மூலம் திரைக்கு அறிமுகம் ஆனார்.

அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் ஆகிய ரஜினி படங்களுக்கு இசையமைத்தவர். விஜய், அஜீத் ஆகியோரின் ஆரம்பக்கால வெற்றிக்கு முக்கிய தூணாக விளங்கியவர். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,

தமிழ்த் திரைப்பட இசைக்கு மகத்தான பங்களிப்பு அளித்தவர். கோடிக்கணக்கான இசை ரசிகர்களின் இதயங்களில் தனி இடத்தைப் பிடித்தவர் தேவா. இசைத் தமிழ் சினிமாவில் அழியாத முத்திரையைப் பதித்தவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments