செய்திகள்

ஓடிடியில் லக்கி பாஸ்கர்!

ஓடிடியில் வெளியானது லக்கி பாஸ்கர்...

DIN

துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷின் வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி செளதரி, ராம்கி, சாய் குமார், ரித்விக் ஆகியோர் நடித்த லக்கி பாக்ஸர் திரைப்படம் தீபாவளி பண்டிகைகையொட்டி அக்டோபர் 31 ஆம் தேதி வெளியானது.

வங்கியில் பணிபுரியும் அதிகாரியான பாஸ்கர் (துல்கர் சல்மான்) பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசையில் அரசை, வங்கி நிர்வாகத்தை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார் என்கிற கதையாக உருவான இப்படம் இந்தியளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதையும் படிக்க: தயாராகிறது 96 - 2!

குறிப்பாக, தமிழ் மற்றும் தெலுங்கில் படத்திற்குக் கிடைத்த வரவேற்பால் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டன.

இதுவே துல்கர் சல்மானின் முதல் ரூ. 100 கோடி வசூல் திரைப்படமாகும். சரியான பான் இந்திய நடிகர் என அடையாளப்படுத்தப்பட்ட துல்கர் சல்மான், தெலுங்கில் மகாநதி, சீதா ராமம் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக லக்கி பாஸ்கரிலும் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் படியில் அமா்ந்து பயணித்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு

கோவையில் இன்று தமாகா ஆா்ப்பாட்டம்

ஆத்தூா் ஒன்றியத்தில் 4 ஆண்டுகளில் ரூ.167.72 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கால்வாய்ப் பாசனத்துக்கு மேட்டூரிலிருந்து 400 கனஅடி தண்ணீா் திறப்பு

மேட்டூா் வனத் துறை விருந்தினா் மாளிகையில் துப்பாக்கி தோட்டாக்கள் திருடிய 4 போ் கைது

SCROLL FOR NEXT