நடிகை வனிதா விஜயகுமார் 
செய்திகள்

நடிகை வனிதா விஜயகுமாருக்கு திருமணம்! நிஜ அறிவிப்பா, திரைப்பட விளம்பரமா?

நடிகை வனிதா விஜயகுமார் புகைப்படம் வைரலாகி வருகிறது...

DIN

நடிகை வனிதா விஜயகுமார் வெளியிட்ட புகைப்படம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார் நடிகையாக இருக்கிறார். வெள்ளித்திரை, சின்னத்திரை என தொடர்ந்து நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கவனம் ஈர்த்தார்.

இதற்கிடையே, அவருக்கும் பீட்டர்பால் என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணமானது. ஆனால், சில நாள்களிலேயே இருவரும் பிரிந்ததுடன் பீட்டரும் திடீர் மரணமடைந்தார். இதுகுறித்து சர்ச்சைகள் எழுந்தன. ஆனால், தன் குழந்தைகளுடன் தனியாகவே இருப்பதாக வனிதா தெரிவித்தார்.

வனிதா விஜயகுமார் - ராபர்ட்

இந்த நிலையில், வனிதா இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவேற்றினார். அதில் அவரும் ராபர்ட் மாஸ்டரும் இருக்கும் புகைப்படத்தில் அக்.5 தேதியைக் குறித்துக்கொள்ளுங்கள் என குறிப்பிட்டிருந்தது.

இது திருமண அழைப்பிதழ்போல் உள்ளதால் மீண்டும் வனிதாவுக்குத் திருமணம் என செய்திகள் வெளியாகின. ஆனால், அவரும் ராபர்ட்டும் இணைந்து நடிக்கும் படத்திற்கான புரமோஷன் போஸ்டர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எது உண்மை என்று தெரியாததால், ‘இப்படியெல்லாமா குழப்புவீர்கள்’ என ரசிகர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹேப்பி தந்தேராஸ்... நேஹா சர்மா!

குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கலாமா? சரிசெய்யும் 10 இயற்கை வழிமுறைகள்!

பைசன், டியூட், டீசல் முதல்நாள் வசூல்... தீபாவளி வெற்றியாளர் யார்?

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளப் பகுதியில் தண்ணீர் திறப்பு!

தீபாவளி ஸ்பெஷல்... மிருணாள் தாக்குர்!

SCROLL FOR NEXT