செய்திகள்

இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்த லப்பர் பந்து படக்குழு!

இளையராஜாவை சந்தித்த லப்பர் பந்து படக்குழு...

DIN

லப்பர் பந்து படக்குழுவினர் இளையராஜாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.

அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அண்மையில் வெளியான படம் லப்பர் பந்து. தமிழரசன் பச்சமுத்து இயக்கியிருக்கும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தாண்டின் சிறந்த படங்களில் ஒன்று என ரசிகர்களிமிடமிருந்து பாராட்டுகளும் கிடைத்துள்ளன.

கிரிக்கெட்டை மையமாக வைத்து குடும்பப் படமாகவும் இது உருவாகியுள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் படம் கவர்ந்துள்ளது.

ரசிகர்களைத் தாண்டி இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஆகியோரும் பாராட்டியிருந்தனர்.

இந்த நிலையில், நடிகர் விஜயகாந்தின் பொன்மனச் செல்வன் படத்தில் இளையராஜா இசையமைத்த, ‘நீ பொட்டு வச்ச தங்கக் குடம்’ பாடலை அட்டகத்தி தினேஷ் காட்சிகளுக்குப் பயன்படுத்தியிருந்தனர். படத்திற்கான விமர்சனங்களில் அப்பாடல் முக்கிய பங்கு வகித்திருந்தது.

இதனால், நடிகர்கள் தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்பட லப்பர் பந்து படக்குழுவினர் இளையராஜாவை நேரில் சந்தித்து தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

சொந்த மண்ணில் விளையாட ஆர்வமாக உள்ளேன்! - பிரிடோரியா வீரர் பிரேவிஸ்

ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

SCROLL FOR NEXT