முகப்பு
செய்திகள்

லப்பர் பந்து வெற்றி..! இயக்குநருக்கு தங்க செயின் பரிசளித்த நடிகர்!

லப்பர் பந்து படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு தங்க செயினை பரிசளித்தார் நடிகர் ஹரிஷ் கல்யாண்.

Updated On : 2 அக்டோபர் 2024, 8:07 pm IST
இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு தங்க செயினை பரிசளித்த நடிகர் ஹரிஷ் கல்யாண்.
பகிர்:

அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அண்மையில் வெளியான படம் லப்பர் பந்து. தமிழரசன் பச்சமுத்து இயக்கியிருக்கும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தாண்டின் சிறந்த படங்களில் ஒன்று என ரசிகர்களிமிடமிருந்து பாராட்டுகளும் கிடைத்துள்ளன.

கிரிக்கெட்டை மையமாக வைத்து குடும்பப் படமாகவும் இது உருவாகியுள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் படம் கவர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

ரசிகர்களைத் தாண்டி இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஆகியோரும் பாராட்டியிருந்தனர்.

இந்த நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாண் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு தங்க செயின் பரிசளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.