விஜய் 69 படத்தில் நரேன், பிரியாமணி இணைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஹெச். வினோத் - விஜய் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் முதல் நடிகராக பாபி தியோல் இணைந்ததாக அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து, பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ இருவரும் இப்படத்தில் இருப்பதை அறிவித்தனர்.
தொடர்ந்து, இப்படத்தில் இயக்குநரும் நடிகருமான கௌதம் வாசுதேவ மேனன் இணைந்ததாக படக்குழு அறிவித்தது.
இதையும் படிக்க: மேடை சரிந்து விபத்து..! பிரியங்கா மோகனனுக்கு என்னானது?
இந்த நிலையில், விஜய் 69 படத்தில் நரேன், பிரியாமணி ஆகியோர் இணைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இப்படம் 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகுமென படக்குழு முன்னதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.
கேவிஎன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.