சிவா பட போஸ்டர்...  
செய்திகள்

ஆர்ஜிவி, நாகர்ஜுனாவின் சிவா..! வைரலாகும் 35ஆவது ஆண்டு போஸ்டர்!

ராம் கோபால் வர்மா இயக்கிய சிவா திரைப்படத்தின் 35ஆவது ஆண்டை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

DIN

ராம் கோபால் வர்மா இயக்கிய சிவா திரைப்படத்தின் 35ஆவது ஆண்டை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக அறியப்படுபவர் ராம் கோபால் வர்மா. இவர் இயக்கிய சிவா, சத்யா ஆகிய படங்கள் இந்திய சினிமாவில் திருப்புமுனையாக அமைந்ததாக சினிமா விமர்சகர்கள் பலரும் கூறியுள்ளார்கள்.

சிவா படம் வெளியாகி இன்றோடு 35ஆவது ஆண்டாக இருக்கிறது.

அன்னபூர்ணா ஸ்டூடியோஸ் தயாரித்த இந்தப் படம் 1989 அக்.5ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் நாகர்ஜுனாவுடன் அமலா, ரகுவரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.

இந்தப் படம் ஸ்டெடி கேமராவில் எடுக்கப்பட்ட காட்சிகள் மிகவும் பாராட்டைப் பெற்றன. திரைக்கதை, ஃபிலிம் மேக்கிங்காக இந்தப் படம் இன்றளவும் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் அன்னபூர்ணா ஸ்டுடீயோஸ் போஸ்டர் வெளியிட்டு, “இந்தப் படம் ஒரு வரலாற்றைக் குறிப்பிடவில்லை; சினிமாவின் வரலாற்றையே மாற்றியது” எனக் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து இயக்குநர் ராம் கோபால் வர்மா, “இந்தப் படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

கடைசியாக ராம் கோபால் வர்மா வியூகம் படத்தினை இயக்கியிருந்தார். கல்கி 2898ஏடி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது, சாரீ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

நடிகர் நாகர்ஜுனா கூலி, குபேரா படங்களில் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாா்க்கண்ட்: நக்ஸல் கண்ணிவெடி தாக்குதலில் சிஆா்பிஎஃப் வீரா் உயிரிழப்பு

அண்ணா நகா் மேற்கு மில்லினியம் பூங்காவில் இறகுப்பந்து மைதானத்துக்கு அடிக்கல்

இருமல் மருந்து இறப்புகள்: கோல்ட்ரிஃப் விற்பனைக்கு தில்லி அரசு தடை

முதல்வா் ஸ்டாலின், ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நீதிபதி மீது காலணி வீசிய சம்பவத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT